ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மரணம்
#Death
#Attack
#Pakistan
#officer
Prasu
2 months ago

பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது ராணுவ வீரர் அபினந்தன் வர்தமான் சென்ற மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது பாராசூட் மூலம் வெளியே குதித்த அபினந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கினார்.
இதையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார். அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கியபோது அவரை சிறைபிடித்தவர் பாகிஸ்தான் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா என்பவர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடமேற்கு பாகிஸ்தான் பகுதியான கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான்கள் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது.
இதில் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



