இஸ்ரேல் மற்றும் ஈரானில் வசிக்கும் தமிழர்களை மீட்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
#M. K. Stalin
#Israel
#War
#Iran
#Indian
Prasu
2 months ago

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நிலவிவரும் சூழலில் இரு நாடுகளிலும் வசிக்கும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் விவரங்களை பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரான், இஸ்ரேல் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



