சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய சோனியா காந்தி

#India #Hospital #Politician
Prasu
2 months ago
சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய சோனியா காந்தி

78 வயதுடைய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி 17ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அவருக்கு டாக்டர்கள் அமிதாப் யாதவ், டாக்டர் நந்தினி ஆகியோர் சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை தலைவர் அஜய் சுவரூப் தெரிவித்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கங்காராம் வைத்தியசாலை தலைவர் அஜய் சுவரூப், “சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு டாக்டர்கள் தகுந்த சிகிச்சையை வழங்கினர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும் வெளிநோயாளி என்ற அடிப்படையில் சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750404287.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!