சீன அரசு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய தடை
#China
#government
#Staff
#Banned
Prasu
3 months ago

சீனாவில் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பை தாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள்.
இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகுவதாக புகார்கள் வந்தன. மேலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு வரும் அரசு அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்துவிடுவது அங்கு தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் அரசு அதிகாரிகள் இரவு நேர விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கைகளில் ஈடுபட அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
குறிப்பாக அரசு அதிகாரிகள் 3 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருங்காலத்தில் அரசாங்கம் சார்பில் உளவு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



