ரஷ்யாவுக்கு 5,000 ராணுவ கட்டுமானத் தொழிலாளர்களை அனுப்பும் வடகொரியா
#Russia
#NorthKorea
#War
#Troops
Prasu
4 months ago
ரஷ்யாவின் குர்ஸ்க் ஒப்லாஸ்ட்டுக்கு வட கொரியா 5,000 இராணுவ கட்டுமானத் தொழிலாளர்களையும் 1,000 சப்பர்களையும் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் உக்ரேனிய ஊடுருவலால் ஏற்பட்ட பரவலான சேதத்தை மாஸ்கோ சரிசெய்து வருவதாக கிரெம்ளினின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காகவே மேற்படி தொழிலாளர்கள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரேனிய இராணுவத்தால் படையெடுக்கப்பட்டு, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யப் படைகளால் மீண்டும் கைப்பற்றப்பட்ட மூலோபாய எல்லைப் பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப தொழிலாளர்கள் உதவுவார்கள் என்று ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்கு கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
