அமெரிக்காவில் 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பயணத்தடை இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது!
#SriLanka
#Trump
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடை இன்று (09) அமலுக்கு வருகிறது.
அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோங்கா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதி பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
