வங்கதேசத்தில் அறிமுகமாகும் ஸ்டார்லிங்க் இணைய சேவை

#ElonMusk #Bangladesh #Internet #Network
Prasu
3 hours ago
வங்கதேசத்தில் அறிமுகமாகும் ஸ்டார்லிங்க் இணைய சேவை

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் உடைய ஸ்டார்லிங்க் இணைய சேவை வங்கதேசத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் உடைய சிறப்பு உதவியாளர் பைஸ் அகமது இதை உறுதிப்படுத்தி உள்ளார். 

ஸ்டார்லிங்க் ரெசிடென்ஸ், ஸ்டார்லிங்க் ரெசிடென்ஸ் லைட் என்ற இரண்டு வகையான மாதாந்திர நெட்வொர்க் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் 300 Mbps வரை இணைய வேகத்தை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 19 அன்று ஸ்டார்லிங்க் சேவையை வங்கதேசத்தில் வழங்க எலான் மஸ்க்கிற்கு முகமது யூனுஸ் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அரசின் இணைய சேவை கொள்கைகளை ஸ்டார்லிங்க் ஏற்க மறுப்புத்தால் அதன் சேவைகளை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747764611.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!