கம்போடியாவில் புகழ்பெற்ற கோவில் வளாகத்தில் மின்னல் தாக்கம் - மூவர் உயிரிழப்பு!

கம்போடியாவின் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயில் வளாகத்தைப் பார்வையிடச் சென்றபோது மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர்கள் , யுனெஸ்கோ தளத்தின் பிரதான கோயிலைச் சுற்றி அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்ததையும், பார்வையாளர்களும் தள அதிகாரிகளும் காயமடைந்த சிலரை அழைத்துச் சென்று மற்றவர்களுக்கு கால்நடையாக உதவுவதையும் காட்டியது. மற்ற படங்கள் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெறுவதைக் காட்டியது.
சம்பவம் நடந்த மறுநாளே, கம்போடியாவின் சுற்றுலா அமைச்சர் ஹவுட் ஹக், "எதிர்மறையான தகவல்கள்" பரவுவது நாட்டின் சுற்றுலாத் துறைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறி, இது குறித்த ஆன்லைன் பதிவுகளை நீக்குமாறு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



