வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மே 15 (May 15)

#people #history #Lanka4 #World
Prasu
1 hour ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மே 15 (May 15)

கிரிகோரியன் ஆண்டின் 135 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 136 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • கிமு 495 – மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது.
  • 221 – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார்.
  • 392 – உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார்.
  • 908 – மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான்.
  • 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
  • 1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பொத்வெல் பிரபு யேம்சு எப்பர்ன் என்பவரை மூன்றாவது கணவராகத் திருமணம் புரிந்தார்.
  • 1618 – யோகான்னசு கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
  • 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • 1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.
  • 1730 – ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமராக ராபர்ட் வால்போல் பதவியேற்றார்.
  • 1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான முன்மொழிவுகளைத் தருமாறு 5-வது வெர்ஜீனியப் பேரவை காங்கிரசு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது.
  • 1792 – பிரான்சு சார்தீனிய இராச்சியத்துடன் போரை ஆரம்பித்தது.
  • 1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின.
  • 1800 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
  • 1811 – பரகுவை எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1848 – 1848 புரட்சிகள்: போலந்து, ஆப்சுபர்க் கலீசியாவில் பண்ணையடிமை ஒழிக்கப்பட்டது.
  • 1849 – இரண்டு சிசிலிகளின் படைகள் பலெர்மோவைக் கைப்பற்றி, சிசிலியின் குடியரசு அரசைக் கலைத்தன.
  • 1850 – கலிபோர்னியாவின் லேக் மாவட்டத்தில் பெருந்தொகையான போமோ இந்தியப் பழங்குடிகள் அமெரிக்க இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1851 – நான்காவது இராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
  • 1891 – திருத்தந்தை, பதின்மூன்றாம் லியோ தொழிலாழர் உரிமை, நிலவுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான ஆணையைப் பிறப்பித்தார்.
  • 1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.
  • 1904 – உருசிய-சப்பானியப் போர்: சப்பானின் போர்க்கப்பல்கள் ஆட்சூசி, யாசிமா ஆகியன 496 பேருடன் உருசியர்களினால் மூழ்கடிக்கப்பட்டன.
  • 1911 – மெக்சிக்கோவில் தொரெயோன் நகரில் 300 இற்கும் அதிகமான சீனக் குடியேறிகள் மெக்சிக்கோ புரட்சிவாதிகளால் கொல்லப்பட்டனர்.
  • 1919 – துருக்கியின் இசுமீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.
  • 1928 – வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் முதற்தடவையாக பிளேன் கிரேசி என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
  • 1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1932 – இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து சப்பானியப் பிரதமர் இனுக்காய் சுயோசி கொல்லப்பட்டார்.
  • 1934 – கார்லிசு உல்மானிசு லாத்வியாவில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார்.
  • 1935 – மொஸ்கோவில் சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் சமருக்குப் பின்னர் இடச்சுப் படைகள் செருமானியப் படைகளிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து செருமனியின் வசம் இருந்தது.
  • 1940 – மெக்டொனால்ட்சு தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் சான் பெர்னாதீனோவில் ஆரம்பித்தது.
  • 1941 – பிரித்தானிய மற்றும் நட்புப் படைகளின் முதலாவது தாரை வானூர்தி சேவைக்கு விடப்பட்டது.
  • 1943 – ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்நாடு) கலைத்தார்.
  • 1948 – பலத்தீன் மீதான பிரித்தானியக் கட்டளை முடிவுக்கு வந்ததை அடுத்து, இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவூதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.
  • 1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
  • 1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
  • 1958 – சோவியத்தின் இசுப்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1960 – சோவியத்தின் இசுப்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார். இவரே தனியாளாக விண்வெளிக்குச் சென்ற கடைசி அமெரிக்கர் ஆவார்.
  • 1972 – 1945 முதல் அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இரியூக்கியூ தீவுகள் மீண்டும் சப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • 1974 – பாலத்தீன விடுதலைக்கான சனநாயக முன்னணிப் போராளிகள் இசுரேலியப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தாக்கியதில் 22 மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1976 – உக்ரைன், வினீத்சியாவிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர்.
  • 1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
  • 1988 – ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில் வெளியேற்ற ஆரம்பித்தது.
  • 1991 – எடித் கிரசான் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
  • 1996 – ஈழப்போர்: இலங்கைத் தரைப்படை யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக மூன்றாம் சூரியக்கதிர் நடவடிக்கையை ஆரம்பித்தது.[1][2]
  • 2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
  • 2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 2008 – கலிபோர்னியா ஒருபால் திருமணத்தை அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமானது. 2004 இல் மாசச்சூசெட்ஸ் அங்கீகரித்திருந்தது.
  • 2013 – ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1803 – ஆர்தர் காட்டன், பிரித்தானியப் படைத்தளபதி, பொறியியலாளர் (இ. 1899)
  • 1817 – தேபேந்திரநாத் தாகூர், இந்திய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1905)
  • 1845 – இலியா மெச்னிகோவ், உருசிய விலங்கியலாளர் (இ. 1916)
  • 1857 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1911)
  • 1859 – பியேர் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1906)
  • 1907 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராளி (இ. 1931)
  • 1908 – சு. ம. மாணிக்கராஜா, இலங்கை அரசியல்வாதி
  • 1912 – புளிமூட்டை ராமசாமி, தென்னிந்திய நகைச்சுவை நடிகர்
  • 1913 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய வானியலாளர் (இ. 1987)
  • 1915 – பவுல் சாமுவேல்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2009)
  • 1922 – டி. கே. ராமமூர்த்தி, தமிழக இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 2013)
  • 1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)
  • 1937 – மாடிலின் ஆல்பிரைட், செக்-அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்காவின் 64-வது அரசுச் செயலாளர்
  • 1951 – பிராங்க் வில்செக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
  • 1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி
  • 1967 – மாதுரி தீட்சித், இந்திய நடிகை
  • 1983 – சந்தோஷ் நாராயணன், தமிழக இசையமைப்பாளர்
  • 1987 – ஆண்டி முர்ரே, இசுக்கொட்டிய டென்னிசு வீரர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747259609.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!