25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் ராணுவம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷேன் சிந்தூர் என்ற பெயரில் 07-05-2025 அன்று 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 9 இடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தியது.
இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானை நோக்கி டிரோன்களை செலுத்தியது. இந்த டிரோன்கள் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற இடங்களை தாக்கியது. இதில் லாகூர் வான் பாதுகாப்பு சிஸ்டம் தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் 25 டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவால் செலுத்தப்பட்ட இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 25 ஹெரோப் டிரோன்களை பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் இருந்து டிரோன்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
எதிரிகள் மற்றும் எதிரிகளின் அனைத்து நோக்கங்களையும் அழிக்கும் வகையில் பாகிஸ்தான் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



