வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மே 08 (May 08)

#people #history #Lanka4 #World
Prasu
2 days ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மே 08 (May 08)

கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
  • 1794 – பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
  • 1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
  • 1842 – பாரிசு நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீப்பிடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
  • 1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை விற்பனைக்கு விட்டார்.
  • 1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் உயிரிழந்தனர்.
  • 1912 – பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1921 – உருமேனியாவில் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1927 – பாரிசில் இருந்து நியூ யார்க் வரை வானூர்தியில் முதல்தடவையாக இடைத்தங்கல் எதுவுமின்றி பறந்து சாதனை படைக்க முயன்ற பிரான்சியப் போர் வீரர்கள் சார்லசு நுங்கெசர், பிரான்சுவா கோலி ஆகியோர் இடையில் காணாமல் போயினர்.
  • 1933 – மகாத்மா காந்தி தலித் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வான்படை இங்கிலாந்தின் நோட்டிங்காம், டார்பி நகரங்கள் மீது குண்டுகளை வீசியது.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசின் வானூர்தி தாங்கிக் கப்பல் அமெரிக்கக் கடற்படையின் லெக்சிங்டன் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அடுத்து பவளக் கடல் சமர் முடிவுக்கு வந்தது.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோசு தீவுகளில் ஓர்சுபரோ தீவில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை அரண்காவல் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சி முறியடிக்கப்பட்டு மூன்று இலங்கையர் தூக்கிலிடப்பட்டனர். மேலும் எட்டு பேருக்கு 3-7 ஆண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் மேற்குப் பகுதிப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
  • 1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
  • 1946 – எசுத்தோனிய பள்ளி மாணவிகள் இருவர் தாலின் நகரில் அமைக்கப்பட்டிருந்த சோவியத் நினைவகத்தைத் தகர்த்தனர்.
  • 1963 – கத்தோலிக்க அரசுத்தலைவர் நியோ டின் தியெம் கீழிருந்த தென் வியட்நாம் படையினர் வெசாக் நாளில் பௌத்தக் கொடி ஏற்றுவதற்கிருந்த தடையை மீறிய பௌத்தர்கள் மீது சுட்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
  • 1978 – ரைன்ஹோல்ட் மெஸ்னெர், பீட்டர் எபெலர் இருவரும் முதற்தடவையாக ஆக்சிசன் ஊக்கி எதுவும் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் மனிதர் எனற சாதனையை ஏற்படுத்தினர்.
  • 1980 – பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
  • 1984 – டெனிசு லோர்ட்டி என்ற இராணுவ வீரர் கியூபெக் சட்டமன்றத்தினுள் புகுந்து சுட்டதில் மூவர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்தனர்.
  • 1987 – வட அயர்லாந்து, லோகல் என்ற இடத்தில் எட்டு ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
  • 1997 – சீனாவில் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர்.
  • 1998 – இலங்கையின் தெற்கே திக்குவல்லையில் சிங்களவருக்கும் முசுலிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.
  • 2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.
  • 2017 – தமிழ் விக்கிப்பீடியாவில் 100,000-வது கட்டுரை எழுதப்பட்டது.

பிறப்புகள்

  • 1521 – பீட்டர் கனிசியு, டச்சு-சுவிட்சர்லாந்து மதகுரு, புனிதர் (இ. 1597)
  • 1737 – எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய அரசியல்வாதி, வரலாற்றாளர் (இ. 1794)
  • 1786 – ஜான் வியான்னி, பிரான்சியப் புனிதர் (இ. 1859)
  • 1828 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய சுவிட்சர்லாந்து தொழிலதிபர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1910)
  • 1884 – ஹாரி எஸ். ட்ரூமன், ஐக்கிய அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவர் (இ. 1972)
  • 1894 – பெஞ்சமின் கிரகாம், பிரித்தானிய-அமெரிக்கப் பொருளியல் நிபுணர் (இ. 1976)
  • 1895 – புல்டன் சீன், அமெரிக்கப் பேராயர் (இ. 1979)
  • 1899 – பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரியப் பொருளியலாளர் (இ. 1992)
  • 1916 – சின்மயானந்தா, இந்திய சமயத் தலைவர் (இ. 1993)
  • 1924 – சு. வித்தியானந்தன், இலங்கைக் கல்விமான், தமிழறிஞர் (இ. 1989)
  • 1925 – கு. சி. அமுர், இந்திய எழுத்தாளர், விமர்சகர்
  • 1929 – கிரிஜா தேவி, இந்தியப் பாடகி (இ. 2017)
  • 1926 – டேவிட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய சூழலியலாளர்
  • 1938 – ஜாவிட் புர்க்கி, இந்தியப்-பாக்கித்தானியத் துடுப்பாளர்
  • 1953 – ரெமோ பெர்னாண்டஸ், போர்த்துகீச-இந்தியப் பாடகர்
  • 1953 – தேவி செட்டி, இந்திய இதய அறுவை சிகிச்சையாளர், தொழிலதிபர்
  • 1954 – குவாம் ஆந்தனி அப்பையா, கானா-ஆங்கிலேய மெய்யியலாளர்
  • 1993 – பாட் கம்மின்ஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746654667.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!