புனித திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு ஆரம்பம்

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் காலியாக இருந்த திருத்தந்தை பதவிக்கு அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய மாநாடு, ரோமில் தொடங்கியது.
ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 70 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்கள் இந்த மாநாட்டிற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் கூடியிருந்த உலகெங்கிலும் இருந்து கார்டினல்கள் நடத்திய தெய்வீக வழிபாட்டிற்குப் பிறகு வாக்களிக்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடை பெறும். ஒவ்வொரு கார்டி னல் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.
புதிய போப் தேர்வு போட்டியில் இத்தாலியை சேர்ந்த பியட்ரோ பரோலின்(வயது 70), ஹங்கேரியை சேர்ந்த பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), உள்பட 8 பேர் உள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



