உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 37 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

3 என்ற குருபகவானும் 7 என்ற கேதுவும் இணைந்த
இந்த 3 7 ம் எண் சூரியனின் முழு ஆட்சி பலத்தை குறிக்கிறது . இந்த 37 ம்
எண்ணை பற்றி எகிப்திய சித்திரங்களில் அரசனும் கோப்பைகளும் போன்ற
சித்திரங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .
பூரண
சந்திர பிரகாசம் என்று சாஸ்திரங்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன .
பார்வதியும் பரம சிவனும் ஒன்றாய் இணைந்து கலந்து இருப்பதை இவ்வெண்
உணர்த்துகிறது . "பிரம்ம ராட்சஸ பூத பிரதேச பிசாச நிவாரணம் " என்று
தேவியின் புகழ் பாடும் சௌந்தர்யா லஹரி நூல் கூறுகிறது .
மிக்க
அதிர்ஷ்டமும் - மிக வேகமான முன்னேற்றமும் வசீகர மேன்மையும் தரும் . காதலில்
வெற்றியையும் தனக்கு மேம்பட்டவர்களால் நேசிக்க படுதலையும் இவ்வெண்
குறிக்கிறது .
ஆண்களால் பெண்ணும் பெண்களால் ஆணும் ஈர்த்தல் வசீகரித்தல் உதவி பெறுதல் சுகப்படல் ஆகியன இந்த எண்ணின் விசேஷ தன்மைகள் ஆகும் .
சிநேகிதத்தால்
சிறப்பும் மேன்மையும் தொழிலில் நண்பர்களின் ஆதரவும் இந்த 37 ம் எண்ணால்
ஏற்படும் . செல்வம் கலை ஆர்வம் பல வகையான முயற்சிகளால் முன்னேற்றத்தையும்
இந்த எண் பெற்று தரும் .
3 என்ற குருவும் 7 என்ற கேதுவும்
இணைந்து சூரிய ஆதிக்க பிரகாசம் மிக தெளிவாக இருப்பதால் கோடீஸ்வர யோகமும் மன
ஈர்ப்பு மகிமைகளும் ஆத்மார்த்த அன்பும் அரவணைப்பும் இந்த 37 ம் எண்ணில்
மிகுந்துள்ளன .
ஒரு குறிப்பிட்ட உயர்ந்த நிலைக்கு வந்த பின்னர்
சிறு சரிவு உண்டாகி மீண்டும் முயன்று வெற்றியையும் கொடுக்கும் . " சிம்ம
ராசியின் சூரிய ஆட்சி பலத்தை இந்த எண் குறிப்பதால் அரசியல் அரசாங்க
யோகங்கள் இந்த எண்ணிற்கு உண்டு . இந்த எண்ணே பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக
வரும்பொழுது வெற்றி மேல் வெற்றி குவியும் .
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



