காங்கோவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் - 33 பேர் மரணம்
#Death
#Lanka4
#Flood
#HeavyRain
#Congo
Prasu
3 weeks ago

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் , பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கின்ஷாசாவில் உள்ள 13 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



