இந்தியாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 17 பேர் மரணம்

#India #Death #firecracker
Prasu
4 weeks ago
இந்தியாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 17 பேர் மரணம்

பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 17 பேர் உயிரிழந்துவிட்டனர். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகரம் அருகே அந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு பட்டாசுகளைச் சேமித்து வைக்கும் கிடங்கில் செவ்வாய்க்கிழமை காலை ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை அதிகாரி கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தீ விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்தவர்கள் தீசா நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743530174.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!