உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 25 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 25 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் .
சந்திரனும்
புதனும் இணைந்த " கேது பலம்" பொருந்திய எண் இது . இந்த எண்ணின் முழு
பலத்தையும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது . சரியான பாதையில் மனதை
செலுத்தி உழைத்தால் உயர் பதவியும் அந்தஸ்தும் கௌரவமும் தரும்.
மேலும்
இந்த எண்ணை பற்றி " ரத்ன பீடத்தின் மணிமுடிகள் " என மந்திர சாஸ்திரம்
கூறுகிறது . " உன்னத பதவியும் அதிகாரமும் என தேவியின் புகழ் பாடும்
சௌந்தர்ய லஹரி கூறுகிறது .
இந்த எண் பெயரில் அமையும்பொழுது ஆரம்ப
கால கட்டங்களில் சில ஏற்ற இறக்கங்கள் உண்டாகி , பின் வாழ்வில் ஆன்ம
வளர்ச்சியும் ஜனங்களின் ஆதரவும் உலக அறிவும் - வெற்றிகளும் குவியும் .
தனக்கு தானே ஆச்சார்ய அபிமானங்களை வகுத்து கொண்டு லட்சிய நெறியில் மேலான
வாழ்வை அடைய முற்படுவர் .
எழுத்தாளராகவும் பேச்சாளராகவும்
அமைதியும் அருளும் பெற்ற மக்களின் ஆதரவு பிரதிநிதிகளாகவும் விளங்கும்
இவர்களுக்கு அனுபவத்தில் பெற்ற ஞானமும் உயர் பதவியும் செல்வமும்
செல்வாக்கும் அமையும்.
ஞானக்காரனின் அருளை குறிக்கும் இந்த 25 ம்
எண்ணில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திகழ்கிறார். இந்த எண்ணிக்கையில் சிலருக்கு சுய
வாழ்க்கையில் சோதனைகளும் துக்கங்களும் நிலையாக உண்டாகின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



