உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள் - 10 பேர் மீட்பு
#India
#Workers
#snowstorm
Prasu
7 months ago
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட பத்ரிநாத் பகுதியில் மனா கிராமத்தில், எல்லை சாலைகள் அமைப்பை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் அந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட பெரிய பனிச்சரிவு சிக்கியுள்ளனர்.
இதில் 57 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு விட்டனர். பின்னர் அவர்கள், மனா பகுதியருகே உள்ள ராணுவ முகாமுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் பலருடைய நிலைமை மோசமடைந்து உள்ளது. மீதமுள்ள 47 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
