உலக சாதனையை முறியடிக்க புறப்பட்ட இந்திய சைக்கிள் ஓட்டுநர் சிலியில் மரணம்

#India #Accident #Chile
Prasu
2 months ago
உலக சாதனையை முறியடிக்க புறப்பட்ட இந்திய சைக்கிள் ஓட்டுநர் சிலியில் மரணம்

உலக சாதனையை முறியடிக்க புறப்பட்ட இந்திய சைக்கிள் பந்தய வீரர், சிலி நாட்டில் மினி பஸ் மோதியதில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரியாவின் மைக்கேல் ஸ்ட்ராசரின் 10,000 கி.மீ., சைக்கிள் பயணம் செய்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை முறியடிக்கும் நோக்கில் இந்தியாவைச் சேர்ந்த மோஹித் கோஹ்லி லட்சியப் பயணம் தொடங்கினார்.

கார்டஜீனாவில் தொடங்கி கொலம்பியா, பெரு, ஈக்வடார் மற்றும் சிலி போன்ற நாடுகளை உள்ளடக்கியதாக இவரது பயணம் இருந்தது.

இந்நிலையில் மோஹித் கோஹ்லி, சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்தபோது, போசோ அல்மோன்டே கம்யூனில் ரூட் 5ல் அவர் மீது மினி பஸ் மோதியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போசோ அல்மோன்டே தீயணைப்புத் துறை கண்காணிப்பாளர் எப்ரைன் லில்லோவ்:மோஹித் கோஹ்லி சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து குறித்து விசாரிக்க அதிகாரிகள் விரைவாக வந்தனர். போக்குவரத்து விபத்து புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் அலெக்சிஸ் குட்டிரெஸ் கோர்பாலன் தகவலின் பேரில் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!