காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

#India #Death #students #River
Prasu
10 months ago
காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீயணைப்பு வீரர்கள் இரவு வரை தேடியும் நீரில் மூழ்கிய மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் 2வது நாளாக தேடும் பணி தொடங்கியது. காலை 7.05 மணியளவில் அதே பகுதியில் மணலில் சிக்கியிருந்த ஜாகிர்உசேனின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து மற்ற 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. மாலை 3.30 மணியளவில் சிம்புவின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மற்றொரு மாணவரான விக்னேஷின் உடலை தேடி வந்தனர்.

மாணவரை தேடுவதற்கு வசதியாக முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

 தொடர்ந்து தேடுதல் பணி நடந்த நிலையில் இரவு 10 மணியளவில் விக்னேஷின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!