67 பயணிகளுடன் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம்!

#SriLanka
Thamilini
10 months ago
67 பயணிகளுடன் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம்!

67 பேருடன் பயணித்த அஜர்பைஜானைச் சேர்ந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானதாக பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது. கஜகஸ்தானின் அக்டா நகருக்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளானது.

 எனினும், இந்த விபத்தில் 25 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கஜகஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

 விமானம் விபத்துக்குள்ளானபோது தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் பின்னர் அது அணைக்கப்பட்டது.

 எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களைக் கொண்ட எம்ப்ரேயர் 190 விமானமாகும். இது அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷ்யா நோக்கி பயணித்தது. 

 பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!