மொழிப் பிரச்சினையால் ஏற்பட்ட சிக்கல் : ரஷ்ய துருப்புக்களை சுட்டுக்கொன்ற வடகொரிய வீரர்கள்!
#SriLanka
#Russia
#NorthKorea
#War
Thamilini
10 months ago
உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பின் கூற்றுப்படி, வட கொரிய சிறப்புப் படை வீரர்கள் தவறுதலாக எட்டு ரஷ்ய துருப்புக்களைக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடகொரிய வீரர்கள் உக்ரைன் வீரர்கள் என தவறுதலாக கருதி ரஷ்ய வீரர்களை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
ரஷ்யப் படைகளுக்கும் கிரெம்ளின் துருப்புக்களுக்கு உதவுவதற்காகக் கொண்டுவரப்பட்ட 12,000 வரையிலான வட கொரியப் படையினருக்கும் இடையே உள்ள மொழித் தடை ஒரு முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
இந்த மொழிப் பிரச்சினை காரணமாக ரஷ்ய வீரர்களை தவறுதலாக சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.