13 பணியாளர்களுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய டேங்கர் கப்பல் : விரைந்து சென்ற மீட்புடையினர்!
#SriLanka
#Russia
Thamilini
10 months ago
ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று 13 பணியாளர்களுடன் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வோல்கோனெப்ட்-212 என்ற டேங்கர் கப்பல் கெர்ச் கடற்கரைக்கு அருகில் மூழ்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த கப்பலில் 4,000 டன் எரிபொருள் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்ய அவசரகால அமைச்சகத்தின் ஹெலிகாப்டர் ஒன்றும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகச கூறப்படுகிறது.