இந்தியாவில் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் - 2 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்
#India
#Death
#Tamil Nadu
#Accident
#Road
Prasu
10 months ago
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை என்ற இடத்தில் லாரி மீது ஆல்டோ கார் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் இரவிபேரூரைச் சேர்ந்த 60 வயது ஜேக்கப் ஆபிரகாம் அவரது 55 வயது மனைவி ஷீபா மற்றும் அவர்களது 2 மாத பேரன் ஆரோன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜேக்கப், ஷீபா தம்பதியரின் மகளும், ஆரோனின் தாயுமான 21 வயது அலீனா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கரூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்தனர்.