தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டது ஏன்?
#SriLanka
#Electricity Bill
Thamilini
11 months ago
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் அதிகபட்ச மட்டத்தில் இருக்கும் நிலையிலேயே தனியார் அனல் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாருடைய நலன்களுக்காக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பது ஆராயப்பட வேண்டுமென அந்த சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், சமீபத்தில், எங்களுக்கு அதிக மழை கிடைத்தது. எங்கள் நீர் மின் நிலையங்களின் நீர்த்தேக்கங்கள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்தது.
மேலும், நொரோச்சோலை அனல்மின் நிலையத்தில் போதுமான நிலக்கரி உள்ளது மற்றும் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அவற்றில் இரண்டு இயந்திரங்கள் குறைவாக இயங்குகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.