30 சதவீதம் வீழ்ச்சியடைந்த புத்தக விற்பனை : வற் வரியை நீக்குமாறு கோரிக்கை!
#SriLanka
#books
#Vat
Thamilini
10 months ago
புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பிரேரணையை அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு பரிந்துரைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்தார்.
வற் வரி காரணமாக ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.