குஜராத்தில் கார் விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 7 பேர் மரணம்
#India
#Death
#Student
#Accident
Prasu
10 months ago
தேர்வெழுத சென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் உட்பட ஏழு பேர் குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
“அதிக வேகத்தால் கார் சாலையை விட்டு விலகி எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதியது. இரண்டு கார்களிலும் இருந்த ஏழு பயணிகளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்” என்று அதிகாரி தெரிவித்தார்.
நான்கு கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரும், மற்றொரு காரில் இரண்டு பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
காரில் பயணித்த ஐந்து பயணிகள் 60 வயது ஓட்டுநர் வஜு ரத்தோட் மற்றும் நான்கு மாணவர்களான விக்ரம் குவாடியா, தரம் தர்தேவ், அக்ஷத் தவே மற்றும் ஓம் முக்ரா என அடையாளம் காணப்பட்டனர்.
மற்றொரு காரில் பயணித்தவர்கள் 40 வயது ராஜு குதன் மற்றும் 35 வயது வினு வாலா என அடையாளம் காணப்பட்டனர்.