பில்லியனர்கள் குறித்த அறிக்கை வெளியிட்ட சுவிஸ் வங்கி
                                                        #Switzerland
                                                        #Bank
                                                        #World
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        10 months ago
                                    
                                 
                உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
சுவிஸ் வங்கியான யூ.பி.எஸ் நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பில்லியனர்கள் குறித்த ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி பில்லியனர்களின் எண்ணிக்கை 1,757யில் இருந்து 2,682 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் மட்டும் 268 பேர் பில்லியனர்களாக உருவெடுத்துள்ளார்.
இவர்கள் அனைவரும் சுயதொழில் மூலமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு 58.5 சதவீதம் உயர்ந்து 6.1 ட்ரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
 அமெரிக்க பில்லியனர்களின் சொத்து மதிப்பு 27.6 சதவீதத்தில் இருந்து 40 சதவீதத்தை தாண்டியுள்ளது.  
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            