லண்டனில் முக்கிய பாலம் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் : ஆபத்தான நிலையில் ஒருவர் அனுமதி!
#SriLanka
#London
Thamilini
11 months ago
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஸ்காட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பிக் பென் அருகே உள்ள பாலம் தற்காலிகமாக சுற்றி வளைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத நோக்கம் எதுவும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.