புதிய வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான்

#Arrest #Pakistan #ImranKhan
Prasu
11 months ago
புதிய வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதில் பல வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.

தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது. 

இந்த நிலையில் தோஷகானா வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே மற்றொரு வழக்கில் இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர்.

 கடந்த செப்டம்பர் மாதம் 28ந் தேதி இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிப் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக இம்ரான்கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!