நடிகை கஸ்தூரி ஜாமீனில் விடுதலை

#Arrest #Actress #Prison #release
Prasu
1 year ago
நடிகை கஸ்தூரி ஜாமீனில் விடுதலை

எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில், நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை வரும் 29ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். 

அதன் மீதான நேற்றைய விசாரணையில், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதாக குறிப்பிட்டு அவர் ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அவதூறு வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

 சிறைக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம், "என்னை நேசிக்கும் தமிழக அரசுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி. எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி. தெலுங்கானா, ஆந்திரா மக்களுக்கும் மிகப்பெரிய நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!