ஹைதராபாத்தில் பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் மரணம்
#India
#Death
#hyderabad
Prasu
1 year ago
ஹைதராபாத், ஹயாத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுவன் மீது பள்ளியின் இரும்புக்கதவு விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தான்.
முதலாம் வகுப்பு மாணவனான அஜய் ‘எம்பிபி’ பள்ளியில் உள்ள இரும்புக் கம்பிக் கதவின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
சில குழந்தைகள் இரும்புக் கதவின் மேல் ஏறி அதை அங்கும் இங்கும் ஆட்டியுள்ளனர். சரியாகப் பொருத்தப்பட்டிராத கதவின் நாதாங்கி கழன்றதில், கதவு சிறுவன் மீது விழுந்தது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்தன.