தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு அழுது அஞ்சலி செலுத்திய அவரது வளர்ப்பு நாய்
#India
#Bussinessman
#Animal
#Tata
Prasu
10 months ago

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
ரத்தன் டாடா உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் ‘கோவா’அவரது முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.



