மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம் - தீக் குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!
#SriLanka
#Protest
Thamilini
1 year ago
இலங்கை சிறையில் இருக்கும் பாம்பன் மீனவர்களை விடுதலை செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இடம்பெற்றது. இதில் பாம்பன் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், மீனவர்கள் மனு அளிக்க வந்திருந்தனர்.
குறித்த பெண்கள் அலுவலகத்திற்கு முன் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், அதில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.
அவரை தடுத்த போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்து சென்றுள்ளனர்.