உலகளவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ள சாம்சங்

#company #LayOff #World
Prasu
10 months ago
உலகளவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ள சாம்சங்

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக, 10ல் ஒரு ஊழியர் வேலை இழக்கக் கூடிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.

நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், ஊழியர்கள் படிநிலையை சீர் செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அதேநேரம், இத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என சாம்சங் விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஆட்குறைப்பு படலத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது ஊழியர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சாம்சங் நிறுவனம் தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!