நடிகர் ரஜினிகாந்த் குறித்து வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை

#Actor #Hospital #rajini kanth
Prasu
11 months ago
நடிகர் ரஜினிகாந்த் குறித்து வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

அதற்குபின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்த குழாயில் உள்ள அடைப்பும் வீக்கமும் கண்டறியப்பட்டது. 

உடனடியாக அதற்கேற்ற சிகிச்சையை டாக்டர் சாய்சதீஷ் தலைமையிலான டாக்டர் குழுவினர் அளித்தனர். இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதன்படி ரஜினிகாந்த் தற்பொழுது சீராக உள்ளார். அறுவை சிகிச்சையில்லாமல் இருதயத்தில் கதீட்டர் மூலம் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!