ஜனாதிபதி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சில மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன!
 
                கடந்த சீசனில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் இன்று (01.10) பிற்பகல் சில நிறுவனங்களுக்கு மீள அனுப்பப்பட்டுள்ளது.
19 வாகனங்கள் விடுவிக்கப்பட்டதாகவும், அதில் 15 வாகனங்கள் முன்னறிவிப்பின் பிரகாரம் குறித்த இடத்திற்கு வந்த உரிய நிறுவனங்களின் அதிகாரிகளினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து பெறப்பட்ட 08 வாகனங்கள், நிதி அமைச்சிலிருந்து பெறப்பட்ட 03 வாகனங்கள், தென் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தலா 01 வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, மகேஷ் ஹேவாவிதாரண உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            