ஹெலிகாப்டர் விபத்தில் கொலம்பியா ராணுவ வீரர்கள் 8 பேர் மரணம்

#Death #Crash #Soldiers #Helicopter #Colombia
Prasu
7 months ago
ஹெலிகாப்டர் விபத்தில் கொலம்பியா ராணுவ வீரர்கள் 8 பேர் மரணம்

வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

அப்போது அந்த ஹெலிகாப்டர் குமரிபோ என்ற நகராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. 

இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரும் தப்பவில்லை. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 8 பேரும் உயிரிழந்து உள்ளனர். 

 இதனை அந்நாட்டின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார். எனினும், விபத்து எப்போது நடந்தது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!