பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் இடையே மோதலில் 50 பேர் பலி
#Death
#people
#Pakistan
Prasu
1 year ago
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் குர்ராம் மாவட்டம் போஷ்கிரா பகுதியில் 2 பழங்குடியின குழுக்கள் இடையே நீண்டகாலமாக நிலப்பிரச்சினை நிலவி வந்தது.
இந்நிலையில், நிலப்பிரச்சினை இருதரப்பு மோதலாக வெடித்தது. இரு தரப்பு பழங்குடியினரும் கடந்த ஒருவாரமாக துப்பாக்கி சூடு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மோதலில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 120 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பழங்குடியினர்களுக்கு இடையேயான மோதல் குர்ராம் மாவட்டத்தின் பிவர், தரி மங்கல், கஞ்ச் அலிசை, முகியூபில், பெஷ்டுல் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.