ஹாரி பாட்டர் திரைப்பட நடிகை மரணம்
#Death
#Actress
#Movie
#Hollywood
Prasu
10 months ago

ஜே.கே. ரவுலிங் எழுதிய நாவல்களைத் தழுவி உருவாக்கப்பட்ட ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித்.
இவர் வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
2 மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை கொண்ட மேகி ஸ்மித் குடும்பத்தினர் முன்னிலையில் அமைதியான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி(The Prime of Miss Jean Brodie) மற்றும் கலிபோர்னியா சூட்(California Suite) ஆகிய படங்களுக்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார்



