கடன் பிரச்சினை - விமான நிறுவனத்தை விற்கும் பாகிஸ்தான்
#Airport
#Pakistan
#money
#Auction
Prasu
10 months ago

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் அக். 1-ம் தேதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவன ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், "பாகிஸ்தான் சர்வதேச விமான நிவறுனம் ஏலம் அடுத்த மாதம் முதல் தேதி இறுதி செய்யப்படும்" என்று தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஃபரூக் சத்தார் குழுவின் அமர்வில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தில் 51% முதல் 100% வரை விற்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



