ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 51 பேர் உயிரிழப்பு
#Death
#Iran
#Coal
#Blast
#Mine
Prasu
10 months ago

ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 70-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுரங்கத்துக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



