சுற்றுலா பயணிகளுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்திய இத்தாலி
#Tourist
#government
#Italy
#Rule
Prasu
7 months ago

இத்தாலியை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிடும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
விதிகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மத்தியதரைக் கடலில் உள்ள இரண்டாவது பெரிய இத்தாலிய தீவான சார்டினியா, பகுதியை சுற்றியுள்ள நீர் பகுதியை பார்வையிடுபவர்கள் விதிகளை மீறும் பட்சத்தில் அபராதத்தை செலுத்த வேண்டியேற்படும்.
புதிய விதிகளின்படி லா மடலேனா பூங்காவில் இரவு நேரத்தில் தங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
அதிகப்படியான சுற்றுலா உள்ளூர்வாசிகளை விரட்டி, இத்தாலிய நகரங்களின் கட்டமைப்பை மாற்றும் என்ற கவலையை எழுப்பியுள்ள நிலையில் இந்த விதிகள் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



