ரஷ்ய இராணுவத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க விளாடிமிர் புட்டின் உத்தரவு
#Russia
#Putin
#President
#Military
Prasu
1 year ago
ரஷ்ய இராணுவத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் 180,000 ஆக அதிகரிக்க ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் ரஷ்யாவில் மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் பெப்ரவரி மாதம் உக்ரைனுடன் ரஷ்யா போருக்குச் சென்றதிலிருந்து துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புட்டின் உத்தரவிட்டது இது மூன்றாவது முறையாகும்.
கிரெம்ளின் அறிவித்த ஆணையின்படி, புதிய துருப்புக்கள் அடுத்த டிசம்பரில் செயல்படும்.
கடந்த மாதம் ரஷ்யாவின் தெற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலால் புட்டினின் இந்த உத்தரவு தூண்டப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.