மலேசியாவில் இவ்வாண்டின் முதல் mpox தொற்று பதிவு
#Disease
#MonkeyPox
#Malasia
Prasu
11 months ago

மலேசியாவில் இவ்வாண்டின் முதல் mpox எனப்படும் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவம் பதிவாகியிருக்கிறது.
உள்ளூரைச் சேர்ந்த அந்த நபர் அண்மை வாரங்களில் வெளிநாட்டுக்குப் பயணம் போத நிலையில் எப்படி தொற்றியிருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு mpox கிருமியின் வீரியம் சற்று குறைந்த clade இரண்டு ரகம் தொற்றியிருப்பது தெரியவந்தது.
காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் அவருக்குச் சுமார் ஒரு வாரத்துக்கு முன் ஏற்பட்ட பிறகு உடலில் தடிப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஜுலை முதல் மலேசியாவில் 10 mpox clade இரண்டு ரகக் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. இவ்வாண்டில் இதுவே முதல் சம்பவமாகும்.



