நியூயார்க்கில் இந்து கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

#Hindu #Temple #Newyork #Attack
Prasu
11 months ago
நியூயார்க்கில் இந்து கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் மெல்வில்லே பகுதியில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இக்கோவில், அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோவில் மற்றும் உலகின் 2வது மிகப்பெரிய கோவில் என சிறப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர். 

கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். 

சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!