பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா
#India
#PrimeMinister
#Birthday
#Italy
#NarendraModi
Prasu
11 months ago

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இத்தாலி நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்."
"நமக்காக காத்திருக்கும் உலகளாவிய சவால்களை ஒன்றாக எதிர்கொள்ளவும், இத்தாலி மற்றும் இந்தியா இடையிலான நட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.



