இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது ஏவுகணை தாக்குதல்
#Missile
#Israel
#Lebanon
Prasu
11 months ago

லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதை நடுவானில் இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் அழித்தது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானில் இருந்து இஸ்ரேல் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன.
30 வினாடிகளுக்கு பிறகு 35 ஏவுகணைகள் ஏவப்பட்டன.
பல ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் திறந்தவெளி பகுதிகளில் விழுந்தது. இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தது.



