மியான்மாரில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மியான்மாரில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 89 பேர் காணாமல் போயுள்ளதாகவும், சுமார் 240,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் மியான்மர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, யாகி புயலால் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அதன்படி தென்கிழக்காசிய நாடுகளில் புயலால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.