தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் குற்றச்சாட்டை மறுக்கும் தேசிய மக்கள் படை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் குற்றச்சாட்டை மறுக்கும் தேசிய மக்கள் படை!

கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற மாநாட்டின் மீது தமது கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாக தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தேசிய மக்கள் படை தெரிவித்துள்ளது. 

இந்தத் தாக்குதலுக்கும் தமது கட்சியைச் சேர்ந்த எவருக்கும் தொடர்பில்லை என அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியினால் நேற்று தேசிய நூலகம் மற்றும் ஆவண நிலைய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டின் போது மோதல் ஏற்பட்டது. 

பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வனத்தமுல்லை மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் மற்றும் கிருலப்பன பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி திரு.நுவன் பல்லந்துடாவ குற்றம் சுமத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!