உக்ரைன் போரை தீர்ப்பது தொடர்பில் மோடியுடன், புட்டின் கலந்துரையாடல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
8 months ago

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா - உக்ரைன் போரைத் தீர்ப்பதில் ரஷ்யாவின் அணுகுமுறைகள் குறித்து புதின் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
உக்ரைன் பயணத்தை இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு, உக்ரைன் போரை அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்த்து வைப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மோடி வலியுறுத்தியுள்ளார்.



